சுதந்திரம் அர்த்தப்படும் ஐக்கிய இலங்கையை கட்டியொழுப்புவோம்.-நளீர் அஹமட்!

Date:

நளீர் அஹமட்

15 ஆம் நுற்றாண்டின் இறுதி காலப் பகுதியிலிருந்து 450 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் போர்த்துக்கேயருக்கும்,ஒல்லாந்தருக்கும் இறுதியாக பிரித்தானியர்களுக்குமாக அந்நியரின் ஆதிக்க ஆட்சியின் கீழ் இத் தேசம் இருந்தது.1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அந்நிய ஆதிக்க ஆட்சியலிருந்து சுதந்திரம் பெற்றது.இறுதியாக 150 வருட பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு ஆசிய வலய நாடு என்ற வகையில் அப்போது சர்வதேச ரீதியாக வளர்ச்சியடைந்திருந்த அரசியல் கட்சிமுறை,பாராளுமன்ற ஆட்சிமுறை,அரசியல் யாப்பு சீர்திருத்தம் என்பனவற்றின் மூலம் சுதந்திரமான அரசொன்றை நோக்கி முன் செல்வதற்கு முடிந்தது.பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதென முடிவெடுத்ததையடுத்து 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவுடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாதிடப்பட்டன.

முதலாவது பாதுகாப்பு ஒப்பந்தம் இதன் படி திருகோணமலை கடற்படை முகாமிலும்,கட்டுநாயக்க விமானநிலையத்திலும் பிரித்தானியப்படைகளை வைத்திருப்பதற்கு இலங்கை இணங்க வேண்டும்.இரண்டாவது வெளிவிவகார ஒப்பந்தம் இதன் படி பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் போது பிரித்தானிய விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது அரச ஊழியர்கள் தொடர்பான ஒப்பந்தம் அதன் படி இலங்கையில் அப்போது தொடர்ந்தும் கடமையாற்றும் பிரித்தானிய ஊளியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமநல நிதி என்பவற்றை தெடர்ச்சியாக வழங்க இலங்கை சம்மதிக்க வேண்டும் என்பனவாகும்.இதன் பிரகாரமே இலங்கை சுதந்திர சட்டம் அமுலுக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது.

இலங்கை சுதந்திர சட்டம் இவ்வாறு கிடைத்தாலும் 1947 தொடக்கம் 1972 ஆம் ஆண்டு வரை சோல்பரி அரசியல் யாப்பே நடைமுறையில் இருந்துள்ளது.இதன் பிரகாரம் இலங்கை சுயாதீன முழுமையான சுதந்திரத்தை பொற்றிருக்கவில்லை.

இலங்கையில் பிரிதித்தானிய முடியே தொடர்ந்தும் செயற்பட்டமையும்,ஆட்சி நடவடிக்கைகளில் பிரித்தானியாவின் தலையீடு இருந்ததாகவும்,அதாவதுசட்டத்துறை,நீதித்தறை,நிர்வாகத்துறை போன்ற மூன்று முக்கிய துறைகளிலும் பிரித்தானியாவின் செல்வாக்கு கானப்பட்டதாக வரலாறு கூறுகிறது.இவைகளை கலைந்து தன்னாதிக்கம் கொண்ட சுதந்திர யாப்பொன்றின் தேவை பற்றி அன்றைய தலைவர்களினதும்,படித்த வர்க்கத்தினர்களினதும் விழிப்பினால் 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது.

கம்யூனிஸ,சோசலிஸ,தாராண்மைவாதிகளின் ஆதரவுடன் அமைக்கப்ட்ட அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட புதிய யாப்பில் தழிரசுக்கட்சியின் சிபாரிசுகள் புறக்கனிக்ப்பட்டது.தமிழ் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை அரசியலமைப்பு சபை புறக்கனித்தது. சிறுபான்மையினர் புறக்கனிக்காட்ட ஓர் யாப்பாக இருந்தது.

அன்றைய ஆட்சியின் தன்னிச்சையான யாப்பாகவே அது இருந்தது.கம்யூனிஸ்டுகள்,சோசலிஸ்டுகள் கூட அன்று சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரிக்காதது துரதிஷ்டமே.

அதன் பின்னர் 1978 ஆண்டு புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளின் பின்னனி பற்றி நாங்கள் அறிந்ததே.மனித உரிமைகள்,அடிப்படை உரிமைகள் 1978 ஆம் ஆண்டு யாப்பில் இருந்தாலும் அதிகாரப் பகிர்வு கைகூடவில்லை.அன்றும் கூட அப்பேதைய தமிழர் விடுதலைக் கூட்டனியின் சிபாரிசுகள் புறக்கனிக்கப்பட்ட யாப்பாகவே இருந்தது.அன்று தொடக்கம் இன்று வரை இந்த யாப்பின் குறைபாடுகளும்,சில போது யாப்பிலுள்ள விடயப்பரப்புகளை இந்நாட்டின் பெருன்பான்மை சமூகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்களினால் வெறும் அரசியல் நோக்கங்களுக்காக முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல் பேனதனால் ஏற்பட்டஅரசியல்,சமூக விபரீதங்களை நன்குணர்ந்து வைத்திருக்கிறேம். அது போக யுத்த வெற்றிக்கு அப்பாலும் இந் நாட்டிலே மிக குறுகிய கால இடைவெளியில் இந் நாட்டில் ஏற்பட்ட பிரிதொரு அச்சம் இன்னும் தொடர்கிறது.புதிய அரசியலமைப்பாக்கம்.அதுவெரும் அச்சம் அல்ல இந் நாட்டில் சிறுபான்மை சமூகங்களின் இருப்புக்கான கோள்விகளை விட்டுச் செல்லுகிறது.மூன்றில் இரண்டு பெருன்பான்மையைக் கொண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட தற்போதைய ஜனாதிபதி தமது அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற

தெரிவுக்குழுவிற்கு புறம்பாக சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்றை நியமித்து இருப்பது பல கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது.திஸ்ஸ விதாரன போன்றவர்கள் வெளிப்படையாகவே நிலைபேறான அடைவுகளை சாத்தியப்படுத்தாது என்று கூறுகிறார்.

அதே போல தமிழரசுக்கட்சியினருடன் ஜனாதிபதி ஏலவே வழங்கி கலந்துரையாடலுக்கான வாய்ப்பை கால வரையரையின்றி ஒத்தி வைத்ததுடன் இன்று வரை சந்தர்ப்பம் வழங்காது இருப்பதன் விளைவு,13 ஆவது திருத்ததை அமுல்படுத்துமாறு கோரி இந்திய பிரதமருக்கு கடிதம் சமர்ப்பிக்குமளவும் இந்தியாவின் சிறப்பு பிரநிதியொருவரைக் கோரும் நிலை வரையும் நீண்டு சென்று சென்று விட்டது.இந்த நம்பிக்கையீனங்கள் முதலில் களையப்பட வேண்டும்.

நாட்டின் சிறுபான்மை சமூகமொன்றின் உள்ளக சமவாய்ப்புக்கான பரப்புகளை பிறர் தலையீட்டில் தேட வேண்டிய நிலைக்கு சுதந்திர இலங்கையின் 74 வருடங்கள் நீட்சியாக தொடர்கிறது.ஐயப்பாடுகள் களையப்பட்டு நம்பிக்கைகள் துளிர் விடும் நிலைபோறான அடைவுகளை சாத்தியப்படுத்தும் சுதந்திர வருடமாக இந்த வருடம் அமையட்டும்.

2019 இல் இடம் பொற்ற அரசியல் யாப்பு மீறல்கள் கூட ஒரு சாதாரண விடயமாக பார்க்கப்படுகிறது.எந்த வித கேள்விகளுக்கும்,அவதானிப்புகளுக்கும்,எந்தவித குற்றம் சார்ந்த விடயப் பரப்புக்குள்ளாலும் உள்வாங்கப்படாத விடயமாக தொடர்கிறது.இந்நாட்டிலுள்ள ஜனநாயக சமூகம் சிந்திக்க வேண்டும்.

பன்மைச் சமூகத்தின் இயல்பை உள்வாங்காத பௌத்த சமூகத்தின் மூடிய தேசிய விழிப்புணர்வு அல்லது குறுகிய தேசிய உணர்வு இந் நாட்டுக்கு மிக ஆபத்தான விடயம்.மிக கவலையளிக்கும் விடயம் இந்நாட்டிலுள்ள சக்தி வாய்ந்த பௌத்த பிரிவனாக்கல்,அதன் பிரதான சங்கைக்குரிய தலைமை தேரர்கள் மௌனமாக இருப்பதும்,கலந்துரையாடல்களுக்குரியசந்தர்ப்பங்களை ஏற்படுத்தாமலிருப்பதும்,அரசியல் ரீதியாக உணர்வுவயப்பட்டு நிலைமைகளை அங்கீகரிப்பதும் துரதிஷ்டவசமான விடயங்களாகும். இந்த மனோபாவத்திலிருந்து விடுபட வேண்டும்.

இந் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து பன்மைத்துவத்தை அங்கீகரித்து,புரிதலினுடாக ஒருமித்த தேசிய உணர்வை வெளிப்படுத்தாத போது இந்நாடு முன்னோறுவது பற்றி சிந்திப்பதும் கொள்கைவகுப்பதும் பயனளிக்காத செயல்களே.பிரஜைகள் தங்களின் முயற்சியான்மைகளை இந் நாட்டிற்கு வளங்க வேண்டும்.இலங்கை சிறுபான்மை சமூகங்களிலிருந்து கட்டமைக்கபட்ட இனவாத செயற்பாடுகள் குறைவு.சிறுபான்மை சமூகங்கள் முற்றாக இதிலிருந்து தூர விலகி இருக்க வேண்டும்.அவ்வாறு எதும் நடக்கும் பட்சத்தில் இந் நாட்டின் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.தற்பேது ஆயுத பேராட்ட தேல்வியின் பின்னர் தழிழ் சமூகமும் ஜனநாயக பங்கேற்பை நேக்கியே திரும்பியிருக்கிறது.அதிலிருந்து அவர்களை தூரமொதுக்க முடியாது. இதனை பௌத்த சமூகம் சரியாக விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.இதனைப் புரிந்து கொண்டாலே சுதந்திர தினத்தின் மகத்துவம் அர்த்தப்படும்.

இலங்கையின் தேசிய வாதம் அந்நிய ஆட்சிக்கு எதிரான போராட்ட வாசகமாகவே சுதந்திரத்திற்கு முன்னிருந்தது.இன்று ஏதோ ஒரு வடிவில் உள்ளக ரீதியான சுதந்திரம் பற்றி பேசுகிறோம்.உள்ளக யுத்தம்,கிளர்ச்சிகள் இன்றியே பயங்கரவாத தடை சட்டம் நீண்ட நாட்களாக அமுலில் உள்ளது.இது வெகுஜன பங்கேற்புக்கான சந்தர்ப்பங்களை குறைக்கின்றன.

இடதுசாரிக் கட்சிகளும் ஆளுமையும் உள்ளக இனவாத மேலுகைகளை தனித்து சுதந்திரப் போராட்டத்தில் பன்மை சமூகத்தை இணைத்து கொண்டு வெற்றி கண்டது. துரதிஷ்டவசமாக சுய நல அரசியல் நேக்கங்களுக்காகவும்,அதிகார அரசியலுக்காகவும் இன்றுள்ள அதே கொள்கைகளைக் கெண்ட இடது சாரிக்காரர்கள் உள்ளக இனவாத செயற்பாடுகளை கண்டும் காணாமலும் இருப்பதும்,பல் எண்ணிக்கை இனவாத அமுக்ககுழுக்கலுடன் தொடர்புகளை வெளிப்படையாக வைத்திருப்பதும் நாட்டின் நலனை பாதிக்கும் மிக கீழ் தரஅரசியல் எண்ணப்பாடுகளையே வெளிப்படுத்தி நிற்கிறது.

இன்று நாட்டில் மக்கள் சார்ந்து, சமூக கொள்கை சார்ந்து, அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தாமல் ஒரு வகை தனித்த முடிவுகளை நடைமுறைப்படுத்தி வருவதால் பல பிரச்சிணைகள் உருவெடுத்த வன்னமுள்ளன.வாழ்க்கைச் செலவு,அத்தியவசிய பொருட்களுக்கான வரிசைகள்,டொலர் பிரச்சிணை,முறையற்ற நிதி மற்றும் அரச நிர்வாகம் அதனோடினைந்த தேசிய சொத்து விற்பனைகள்,சர்வதேச உறவுகள் போன்று பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் ஆளும் தரப்பின் பங்காளர்களாக இருந்து கொண்டு, இடதுசாரிகள் மக்கள் சார்ந்து செயற்பட வேண்டிய அரசியல் தற்துணிவை இழந்து இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.முதலாலித்துவ கொள்கைகளை கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.

இன்று சிங்கள தேசிய வாதம்,

சிங்கள தேசம்,பௌத்த தேசம்,பௌத்த தேசிய உணர்வு,தானாக குறுகிய பார்வையை தன்னகத்தே வரையறுத்துக் கெண்டுள்ளமை பிழை என்பதை உணரும் காலம் அதனை வடிவமைத்தவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ளது.

அகிம்சை போதிக்கும் பிரிவினரிலிருந்து துவம்சமும்,துவேசமும் தீவிரமாக வெளிப்பட முடியாது.எங்கு கோளாறு ஏற்ப்பட்டது என்பதை இந்த சுதந்திர தின நாளில் சிந்தித்து போக்கை சரிசெய்ய முன்வருவது உள்ளக சுதந்திரத்தின் அர்த்தத்தை யதார்த்தமாக்கும்.

மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளினாலும்,சமூக மேம்பாட்டு கரிசனையினாலும்,மனிதாபிமான உணர்வினாலுமே ஒருமதத் தலைவரின் சமூக அடையாளம் வடிவம் பொற வேண்டும்.

பெருன்பான்மை,சிறுபான்மை இன அரசியல் வாதிகள் சாதாரன மக்களுக்குள் இருக்கும் அடிப்படையான நிலைப்பாடுகளை நேர்மையாக வளர்த்தேடுத்து சமூக மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.சமூக விழிப்பியல் மேலங்கிய நாட்டுப் பிரஜைகளாக தங்களை தாமே தகவமைப்படுத்திக் கொள்ள இன்றைய சுதந்திர தினத்தில் உறுதி பூண்டு ஐக்கியமான தேசிய உணர்வை வெளிப்படுத்த எம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளுவோம்.

ஐக்கிய இலங்கைக்குள், ஏனைய இனத்தவர்களுக்கு பாதுகாபற்ற தேசியவாதமாக மேலேலும் தேசியவாதங்களை தோற்கடிப்போம். இந் நாட்டில் புத்திஜிவித்துவ முற்போக்கு பௌத்த தேரர்கள் உள்ளிட்ட சமய தலைவர்கள் இது பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும்.இல்லையெனில் இந்நாட்டின் கிறாமப்புறங்களிலிருந்து சாதாரன குடிமகனிலிருந்து திட்டமிடப்படாத இனவாத செயற்பாடுகள் வெளிவருவதை தடுக்க முடியாமல் போகும்.

இந் நாட்டில் இனவாத அரசியலின் தீவிரப் போக்கை தனிக்க வேண்டும்.இது சாதாரன பொது மக்கள் சார்ந்த விடயம்.வாக்களிக்கும் மக்கள் தங்கள் வாக்குரிமைகளை விழிப்பு நிலையில் பிரயேகிக்க வேண்டும்.இனத்துவ ரீதியான சிந்தனைகளிலிருந்து வெளிவரும் பொது வெளிகள் குறித்து சகல இன மக்களும் திறந்த மனப்பான்மையுடன் சிந்திக்க வேண்டும்.

சந்தர்ப்பவாதம் இது மிகப் பெரிய ஆனபத்தான விடயம்.இது பலபோது பௌத்த சமூகத்திலிருந்து வெளிப்பட்டாலும் அப்அப்போது தழிழ் சமூகத்தலிருந்தும், முஸ்லிம் சமூகத்திலிருந்தும் வெளிப்படுவதை நன்றாக அவதானிக்கும் போது புரிந்து கொள்ள முடியுமாக இருக்கிறது.அதிலும் குறிப்பாக அரசியல் நோக்கங்களுக்காக வந்து போகிறது. இதிலிருந்தும் நாங்கள் மிக அவசரமாக விடுபட வேண்டும்.

74 ஆவது சுதந்திர தின வருடம் தொடர்ச்சியான சவால் நிறைந்த வருடமாக இருக்கப் பேகிறது.ஒரு புறம் ஏலவே உள்ள கோவிட் மாறுபாடு கொண்ட திரிபுகளினால் ஏற்படும் சவாலும்,உள்ளக ஆட்சி நிர்வாகத்தால் ஏற்படும் சவாலும் என்று தொடரப் போகிறது.குடிமக்களாக எமது கடமைகளையும் பொறுப்புகளையும் யதார்த்தமான பங்கேற்புடன் முழுமனதாக நிறைவேற்றுவோம்.ஒன்றினைந்து தேசிய வலுவை சக்திப்படுத்துவோம்.

இந் நாட்டில் சகேதரத்துவத்துக்கான, சமவாய்ப்புகளுக்கான பங்கேற்புகளை இன்னும் இன்னும் துரமாக்காமல் இருக்கும் சுதந்திர வருடமாக இவ்வருடம் அமையட்டும். இலங்கையின் ஜனநாயகம் அரிசியல்வாதிகளின் கைகளிலிருந்து மக்களிடம் வரவேண்டும்.

இலங்கை சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளை இரண்டாம் நிலை வகிபாகமொன்றுக்கும்,பாராபட்ச கவனிப்புகளுக்கும்,மூன்றாம் தரப்பிற்கான கண்துடைப்பு செயற்பாடுகளுக்கும் இட்டுச் செல்லாமல் இருக்கும் சுதந்திர வருடமாக இருக்கும் அதே வேளை நல்லிணக்கப் பொறிமுறைகளை கூட்டிணைப்பதற்கான செயலகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட நிலை மாற்று கால நீதிச் செயற்ப்பாட்டு அலுவகலங்களை பலப்படுத்தும் செயற்பாடுகளில் கவனக் குவிப்பைச் செலுத்தி ஜனநாயக பங்கேற்புக்கான வாயில்களை திறக்க அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும்.

“சுதந்திரம் இல்லாத வாழ்க்கை உயிர் இல்லாத உடல் போன்றது.”கலீல் ஜிப்ரான்.

 

 

Popular

More like this
Related

இன்றைய நாணய மாற்றுவிகிதம்

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல்...

சிலந்தி,தேள் மாதிரிகளை கடத்த முயன்ற அமெரிக்க அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது !

துருக்கி இஸ்தான்புல்லில் நூற்றுக்கணக்கான விஷ சிலந்திகள் மற்றும் தேள்களை நாட்டிலிருந்து கடத்த...

இம்முறை தனியாக இரண்டாவது நக்பாவை எதிர்கொள்கின்றோம்: பலஸ்தீன மக்கள் கருத்து

நாங்கள் இரண்டாவது நக்பாவை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவிக்கும் பலஸ்தீனியர்கள்  இம்முறை தனித்துவிடப்பட்டுள்ளதாகவும்...

இந்து – முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்: இந்திய பிரதமர் மோடி

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டத்...