முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெர்னாண்டோ நிரபராதியாக கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுவிக்கப்பட்டார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளையடுத்து முன்னாள் அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த போதிலும் ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மீது குற்றவியல் புறக்கணிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக மொத்தம் 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்நிலையில், ஹேமசிறி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் நீதியரசர்களான நாமல் பலாலே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினரால் அவரை விடுவிப்பதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.