உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், சத்திரசிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூட நுகர்வுபொருட்களை கொள்வனவு செய்வதற்கு வெளிப்படையான மற்றும் வினைத்திறன் மிக்க வழிமுறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
அதற்கமைய அனைத்து மருந்துப் பொருட்கள், அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ ஆய்வக நுகர்பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிப்பதே அதன் கொள்கையாகும், அவை சர்வதேச தரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் தயாரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்படி பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், எதிர்காலத்தில் மேற்படி முறையின் பிரகாரம் உள்ளுர் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் வெளிப்படையான மற்றும் வினைத்திறனான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.