கனடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்றை தடுக்கவே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் நடமாடுவோர்,பொது போக்குவரத்தில் பயணிப்போர் தடுப்பூசி சான்றிதழை கொண்டிருப்பதனையும் கனடா அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை எதிர்த்து பாரவூர்தி சாரதிகள் தலைநகர் ஒட்டாவாவிலுள்ள பிரதான வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரகால நிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். 1970 ஆண்டுக்குப் பிறகு கனடாவில் அவசரகால சட்டம் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.