கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நோக்காக கொண்ட செயலமர்வுகள் நிறுத்தம்!

Date:

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நோக்கமாக கொண்ட பயிற்சி வகுப்புக்கள் மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கு ​நேற்று (01) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரையில் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக துறை சார் விரிவுரையாளர்கள், கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களை நடத்துவதும், பரீட்சையை இலக்காகக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவதும், பகிர்ந்தளிப்பதும், இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவதும், பரீட்சை இடம்பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் இவ்வாறான வினாத்தாள்கள் வழங்கப்படுமென சுவரொட்டிகள் மற்றும் பெனர்கள் மூலம் அறிவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இவ் ஒழுங்கு விதிகளை மீறுவோர் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பரீட்சைத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு வசதியாக 29 வைத்தியசாலைகளில் உயர்தரப் பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்கள் இந்த பரீட்சைமத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...