கஹதுட்டுவ பஸ் விபத்தில் 23 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் படுகாயம்!

Date:

ஹொரணை – கொழும்பு வீதியில் கோரலைம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும், இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் பெண்கள் 20 பேர் உட்பட 23 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான இருவர் களுபோவில போதனா வைத்தியசாலையிலும், ஏனையவர்கள் சிறு காயங்களுடன் வெத்தர வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...