கொழும்பின் பல பகுதிகளில் இன்று 36 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக நீர் விநியோகம் தடைபடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு 1, 7, 9, 10, 12 ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை கொழும்பு 8 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும்.
இந்த நீர் வெட்டு இன்று காலை 10 மணி முதல் நாளைய தினம் இரவு 10 மணி வரை அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு 8 மற்றும் 11 இல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.