இலங்கை ஊடக வரலாற்றில் முத்திரை பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவின் மறைவுக்கு ‘நியூஸ் நவ்’ ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
சிஷே்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார (71) கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த பத்மகுமார நேரலை தொலைக் காட்சியில் பத்திரிகைகளில் விவாதத்தை அறிமுகப்படுத்தியதற்காகப் புகழ் பெற்றவர்.
அவர் தனியார் தொலைக்காட்சியில் மேற்கொண்டு வந்த ‘முல்பிட்டுவ’ பத்திரிகை அலசல் நிகழ்ச்சி மூலம் மிகப்பிரபல்யமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இறுதிக் கிரியைகள் நேற்றையதினம் (24) பிற்பகல் 6.30 மணிக்கு பொரளை கனத்தையில் இடம்பெற்றது.