சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது!

Date:

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஷெஹான் மாலக கமகே 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

இது ஒரு அரசியல் சதி என்று கூறிய கமகே, இது குறித்து விசாரணை நடத்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த ஆண்டு இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் முன்மொழியப்பட்ட கறுப்புக் கொடி பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதிலும் ஷெஹான்  முக்கிய பங்காற்றினார்.

ஆகஸ்ட் 2021 இல், தாக்குதல்கள் குறித்த அவரது கருத்துக்கள் குறித்து அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டார்.

ஷெஹான் மாலக கமகே இன்று கைது செய்யப்பட்ட போதிலும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கான சரியான காரணத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...

பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (17) நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல...

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...