ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீரின் வடமேற்கே உள்ள குல்மார்க் பகுதியில் இன்று காலை 11.08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் 15 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.