டெங்கு வைரஸில் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Date:

டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய தற்போது நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும் காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்காரணமாக 24 மணித்தியாலங்களுக்கு மேல் நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியரின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், காய்ச்சலுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி பாரசிட்டமோல் மாத்திரையை தவிர வேறு எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,50 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 48 வீதமானனோர் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர்.

மேல் மாகாணத்தில் களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாகாணங்களிலுள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணம், புத்தளம், காலி, இரத்தினபுரி, திருகோணமலை, மற்றும் மட்டகளப்பு ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனைவரும் டெங்கு நுளம்பு பரவ இடமளிக்காத வகையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...