அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் தமிழ் பெண்ணை கரம்பிடிக்கும் நிலையில், அவர்களது திருமணத்திற்கு தமிழில் பத்திரிகை அச்சடிக்கப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மெக்ஸ்வெல் அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வைத்தியரான வினி ராமன் என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நிச்சய ஒப்பந்தம் நடைபெற்றது.
கொவிட் காரணமாக பிற்போடப்பட்ட இவர்களது திருமணம் எதிர்வரும் 27 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வினி ராமன் இந்தியாவின் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் என்பதால், இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.கிளேன் மெக்ஸ்வெல் ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.