தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய 115,867 தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த சலுகை நிவாரணம் கிடைக்கப்பெறவுள்ளது.
‘பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகளை குறைப்பதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துதல்’ என்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் குழும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் வழங்குதல் தொடர்பான யோசனை வர்த்தக அமைச்சரின் தலைமையிலான குழு கவனத்தில் கொண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளின் பிரகாரம் அடையாளங் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.