நேற்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசுவதற்கு, அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமைக்காக இலங்கை அணிக்கு மொத்த போட்டி கட்டணத்தில் 20% த்தை அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் தீர்மானித்துள்ளார்.
நேற்றைய ஆட்டம் முடிவடையும் போது இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு ஓவர் பின்தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என டேவிட் பூன் தெரிவித்துள்ளார்.
வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஐசிசி நன்னடத்தை விதி 2. 22 இன் பிரகாரம், வழங்கப்பட்ட நேரத்தினுள் ஓவர்களை வீச தவறியதற்காக, தாமதிக்கப்பட்ட ஓவர்களுக்காகவும் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.