மஸ்கெலியா- சாமிமலை பகுதியில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து!

Date:

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த 5 பேர்படு காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு, மீண்டும் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே வேன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மாத்தறை கோட்டேகொட பகுதிகளை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். வேனில் 12 பேர் பயணித்துள்ளதாகவும் இதில் சாரதி உட்பட 5 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு ஏனையோர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...