சியன ஊடக வட்டத்தின் ஏற்பாட்டில் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் செயலமர்வு!

Date:

கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஊடக கழகம் (Media Club) ஒன்றை உருவாக்கும் நோக்கில், சியன ஊடக வட்டத்தின் ஏற்பாட்டில் ஊடக செயலமர்வு ஒன்று நேற்றையதினம் (19) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் சர்ஜூன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப்பொறுப்பாளர் சித்தீக் ஹனீபா, சியன ஊடக வட்டத்தின் உப தலைவரும் நவமணி பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியருமான சாஜஹான், செயலாளரும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரியுமான பவாஸ், உப செயலாளரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி ஆசிரியருமான பஸ்ஹான் நவாஸ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும், மலேசியன் எயார்லைன்ஸின் மென்பொருள் பொறியாளர் ரிம்ஸான், சியன நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் ரிஹ்மி ஹக்கீம் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தியதுடன், நிகழ்வினை சியன ஊடக வட்டத்தின் பெண்கள் பிரிவுத் தலைவி திருமதி பயாஸா தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் திருமதி மௌபியாவும் கலந்து கொண்டிருந்தார்.
அத்தோடு, பாடசாலையின் பழைய மாணவிகள் சங்கம் நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது.

இதேவேளை தரம் 09 முதல் உயர்தரம் வரை கல்வி பயிலும் மாணவிகள் நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இறுதியாக அவர்களுக்கு எழுத்துப்பரீட்சை ஒன்றும் நடாத்தப்பட்டது.

அதற்கமைய இந்த பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் ஊடக கழகத்திற்கான மாணவிகள் தெரிவு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இம்முறை தனியாக இரண்டாவது நக்பாவை எதிர்கொள்கின்றோம்: பலஸ்தீன மக்கள் கருத்து

நாங்கள் இரண்டாவது நக்பாவை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவிக்கும் பலஸ்தீனியர்கள்  இம்முறை தனித்துவிடப்பட்டுள்ளதாகவும்...

இந்து – முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்: இந்திய பிரதமர் மோடி

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டத்...

மாணவ குழுக்களுக்கிடையில் முரண்பாடு: பரீட்சை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கிய தாயார்!

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை வளாகத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை...

விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக மனு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்குமாறு...