“ரஷ்யாவின் படைகளில் ஒரு பகுதி உக்ரைன் எல்லையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை”-ஜோ பைடன்!

Date:

ரஷ்யாவின் படைகளில் ஒரு பகுதி உக்ரைன் எல்லையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை ரஷ்யா உக்ரைன் மற்றும் பெலாரசை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் நேரடியாக மோத விரும்பவில்லை என்ற போதும் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் என்றும் பைடன் எச்சரித்துள்ளார்.

போர் மூண்டால் சர்வதேச அளவில் ரஷ்யா கடும் கண்டனத்தை சந்திக்க நேரிடும் என்றும் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் பாதிப்பு அமெரிக்காவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றில் எதிரொலிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக...

ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின்...

சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...