ரஷ்யாவுடன் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் இளைஞர்கள் அந் நாட்டு வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டி வருகின்றனர். அந் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மரியுபொல் பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து ரஷ்யப் படைகளை தங்கள் நாட்டு வீரர்கள் எதிர்கொள்ள ஏதுவாக பதுங்கு குழிகளை தோண்டும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து தெரிவித்த மைகைலோ என்ற சிறுவன், ரஷ்யா தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் உள்ளதால் இரவில் உறக்கமின்றி தவிப்பதாகவும்,தங்கள் வீரர்களுக்கு உதவ முடிவு செய்து இந்தப் பணியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் ராணுவ வீரர்களுக்கு உதவுவது தங்களது பொறுப்பாகும் என்றும் அச் சிறுவன் கூறியுள்ளார்.பதுங்கு குழிகளை வலுப்படுத்தும் பணிகள் 40க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.