ரஷ்யா உக்ரைன் மீது ஏன் போர் தொடுக்க வேண்டும், விளாடிமிர் புட்டின் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பது ஏன்? -அப்ரா அன்ஸார்!

Date:

சர்வதேசத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளது உக்ரைன்-ரஷ்யா பிரச்சினை.கடந்த நாட்களில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்குமா என்ற அச்சம் இருந்து வந்த நிலையில் நேற்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ளது.உக்ரைன் -ரஷ்யா தாக்குதல் மூன்றாம் உலக மகா யத்தத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் ஒரு பக்கம் இருக்கின்றது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பெரும் அழிவை முதல் நாளிலே ஏற்படுத்தியுள்ளது.இதேநேரம் ஐ.நா மற்றும் அமெரிக்கா ரஷ்யாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.அதனை முற்றாக விளாடிமிர் புட்டின் மறுத்துள்ளார்.ஆக்கிரமிப்புக்களில், உரிமை மீறல்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு எந்த வித தகுதியும் கிடையாது என்பதை புட்டினின் புறக்கணிப்பு எடுத்துக் காட்டுகின்றது.

ரஷ்யா கடந்த ஓராண்டுக்கு மேலாக போருக்கு தயாராகி வந்துள்ளது என்பதை இன்றைய யுத்தத்திலிருந்து காண முடிகின்றது. உக்ரைன் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடு. அதுவும் ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய நாடு உக்ரைன் தான். உக்ரைனை மேலைநாடுகள் பகடைக்காயாக பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ படைகளுடனும் ஐரோப்பிய யூனியனுடன் நெருக்கம் கொண்டு வருவது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைந்து விட்டால் டொனஸ்ட்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகள் நோட்டோ படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வரலாம் என ரஷ்யா கூறுகிறது. இதனைத் தவிர்க்கவே ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் முடிவை உலக நாடுகள் எதிர்த்த போதிலும் தன்னுடைய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு தலைவர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை புடினின் தீர்மானம் பகிரங்கமாக தெரிவிக்கின்றது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...