இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அன்டிஜன் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கொவிட்-19 தொற்றை மேலும் உறுதிப்படுத்த, வனிந்து ஹசரங்கவிற்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.