வவுனியா அனுராதபுரத்துக்கிடையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
புகையிரத தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதால் இவ்வாறு ஐந்து மாதங்களுக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.