இவ் ஆண்டு முழுவதும் 75 ரூபா விலைக்கு சதொச வலைப்பின்னல் மூலம் தேங்காய்களை நுகர்வோருக்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேங்காயின் விலை அதிகரித்து வருவதையடுத்து நுகர்வோர் நியாயமான விலையில் அதனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தெங்கு ஆய்வு நிறுவகத்தினால் வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா சதொச விற்பனை வலைப்பின்னலுடன் இது தொடர்பாக உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)