ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் உட்பட அனைத்து அத்தியாயங்களும் இன்றையதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் 88 இணைப்புகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் கையளிக்கப்பட்டது.
சட்டக்கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியப் பதிவுகள் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி ஆணைக்குழுவின் பெறுபேறுகள் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக இது கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இறுதி அறிக்கை ஏப்ரல் 8, 2021 அன்று பாராளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் சட்ட காரணங்களால் சாட்சி பதிவுகள் வெளியிடப்படவில்லை என்பதுடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பெறுபேறுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான கோப்புகள் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டன.