இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு 121 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார் மற்றும் தினேஸ் சந்திமால் 25 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சில் கேன் ரிசர்ட்சன் மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.தற்போது அவுஸ்திரேலியா அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.போட்டி தொடர்கிறது.