இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு வேலைத்திட்டங்கள் !

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களின் 2021 ஆம் ஆண்டின் பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபத்தி நான்கு இலட்சம் ரூபா(24,00000.00) செலவில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம்,
மட்டக்களப்பு மாவட்டம், மாச்சந்தொடுவாய் மகப்பேறு நிலையத்தில் தாய்மார்களுக்கு வசதியளிப்பதற்கான இடம் தயாரிப்பு,புதிய காத்தான்குடி ஜனாஸா நலன்புரி சங்கத்திற்கு சேவை உபகரணங்கள் வழங்கி வைப்பு,
ஆரையம்பதி ஒல்லிக்குளம் மயானத்தின் சுவர் நிர்மாணம் நிறைவு செய்தலுக்காக ஒரு தொகை நிதி ஒதுக்கீடு,ஏறாவூர் ரஹ்மானியா கல்லூரி விளையாட்டு வளாகம் நிறைவு செய்தல், காத்தான்குடி அஸ் சுஹதா கல்லூரிக்கு டொஷிபா புகைப்பட நகல் இயந்திர நன்கொடை,காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்திற்கு டொஷிபா ரக புகைப்பட நகல் இயந்திர நன்கொடை,
காத்தான்குடி அஸ் ஸஹ்ரா கல்வி நிறுவனத்திற்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைப்பு,காத்தான்குடியில் உள்ள IWARE மகளிர் சுயகற்றல் நிலையத்திற்கு தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் நன்கொடை வழங்கி வைப்பு,காத்தான்குடி முத்தினார் லேன் வீதி இன்டர்லாக் இட்டு நிர்மானம்,பரிசாரியார் லேன் வீதி மஸ்ஜிதுன் நூர் லேனின் இன்டர்லாக் இட்டு நிர்மானம்,
போன்ற செயற் திட்டங்கள் முன்னைடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலான மற்றும் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோரின் வேண்டுகோளின் பிரகாரமே குறித்த நிதிகள் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...