உக்ரைன்-ரஷ்யா போர் Updates;சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுப்போம்-பைடன் அதிரடி!

Date:

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பையன்,போரை ரஷ்யா தான் முதலில் ஆரம்பித்ததாகவும் அதற்கான விளைவுகளை புடின் சந்தித்தே தீர வேண்டும் என்றார்.

உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பப் போவதில்லை என்றும் அதேநேரம் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றார்.

உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் இந்தியா யார் பக்கம் இருக்கிறது என கலந்தாலோசித்து வருவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொழில் நிறுவனங்கள் நான்கு முக்கிய வங்கிகளின் சொத்துக்கள் முடக்கப்படுவதாக பைடன் கூறியுள்ளார். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

Popular

More like this
Related

காசநோய் தடுப்பு மருந்துகளை வழங்கிய இந்தியா

மூன்று தொன் காசாநோய் தடுப்பு மருந்துகளை இந்தியா நன்கொடையாக இலங்கைக்கு வழங்கியுள்ளது....

நாட்டின் 11 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

நாட்டின் 11 மாவட்டங்களில் இன்றைய தினம் அதிக உஷ்ணமான வானிலை நிலவுமென...

அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், விடுதலைக்காகவும் சர்வதேச மட்டத்தில் சைவநெறிக்கூடம் அவசர வேண்டுகோள்

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் இயங்கி வரும் சைவநெறிக்கூடம், இலங்கைக் குடிமகனான  அனோஜன்...

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முஹமதின் மனைவி சித்தி ஹஸ்மா அலி 100வது வயதில் காலமானார்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதின் மனைவியான டாக்டர் சித்தி...