சுதந்திர தினத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்புத் திட்டம்!

Date:

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.இதற்காக இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் உதவியுடனும் 3,000 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

74 வது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி 21 வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குறித்த பாதைகளுக்குரிய மாற்றுப் பாதைகளை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும்.அத்துடன், இந் நிகழ்வுக்கான அணிவகுப்பு ஒத்திகை ஜனவரி மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்திகை இடம்பெறவுள்ளன. எனினும், சுதந்திர சதுக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து இக் கால பகுதியில் நெரிசலைக் குறைக்கும் வகையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் வீதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதனூடாக பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் மற்றும் நெரிசலை குறைக்கும் வகையில் ஒத்திகை இடம்பெறும் நேரத்தில் தேவையான வீதிகள் மாத்திரம் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுதந்திர தின வைபவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் பிரதம அதிதிகள் உள்ளிட்ட அனைவரும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ள வாகனத் தரிப்பிட அட்டையுடன காலை 7.30 மணிக்கு முன்னதாக வருகை தருமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை...

இரத்தினபுரி -குருவிட்ட சிறைச்சாலை மோதல்- 2 பேர் உயிரிழப்பு – 4 கைதிகள் காயம்!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர்...