மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை அமைப்பதற்காக குவைத்திடமிருந்து ரூ.6.6 பில்லியன் கடன்!

Date:

மருத்துவ விஞ்ஞானத்தில் உயர்கல்விக்கான தரம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் மனித மூலதனம், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டில் உள்ள மருத்துவ சேவை நிபுணர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்று நிறுவப்படவுள்ளது.

இந்நிலையில், அரபு பொருளாதார வளர்ச்சிக்கான குவைத் நிதியம் (KFAED) குவைத் தினார் படி 10 மில்லியன் (இலங்கை ரூபாய் 6,600 மில்லியன் ரூபாய்) கடனாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்புடைய கடன் ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதியன்று கொழும்பு நிதி அமைச்சில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல மற்றும் குவைத் அரபு பொருளாதார மேம்பாட்டுக்கான நிதியத்தின் சார்பாக பிரதி பணிப்பாளர் நாயகம் நேதால் ஏ.அல் ஒலயன், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். பு தைர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

களுத்துறை நாகொடையில் உள்ள போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் இந்த மருத்துவ பீடத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய கட்டிடங்கள் வளாகம், மருத்துவ பீடத்திற்கான பிற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி தளபாடங்கள் மற்றும் கருவிகள், ஆய்வக உபகரணங்கள் மற்றும் தொடர்புடைய பிற பொருட்களை வழங்குதல் ஆகியவை இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2022-2026 காலகட்டத்தில் கல்வி அமைச்சினால் செயல்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...