(File Photo)
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜே.வி.பி கட்சி மூன்று தினங்களுக்கு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி தலைமையில் இந்த போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
அதற்கமைய கொழும்பில் மார்ச் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இளைஞர்களின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமையன்று நுகேகொடையில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.
இறுதிப் போராட்டம் விவசாயிகளால் எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொலன்னறுவையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.