‘உலகளாவிய போராட்டத்தை முன்னெடுக்குமாறு பொதுமக்களிடம், உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள்!

Date:

ரஷ்யாவிற்கு எதிராக உலகளாவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உலக மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், உக்ரைன் சின்னங்களுடன் நாட்டின் முக்கிய இடங்களிலும், தெருக்களிலும் உக்ரைனுக்காக போராட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரேனுக்கு ‘பயனுள்ள மற்றும் கட்டுப்பாடற்ற’ உதவிகளை வழங்க நேட்டோவுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறுகையில், மாஸ்கோ தனது எரிவாயுவை ‘நட்பற்ற நாடுகளுக்கு’ ரூபிள்களில் விற்க திட்டமிட்டுள்ளது.

நேட்டோ, ஜி- 7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடுகளுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பிரஸ்ஸல்ஸ் வந்தடைந்தார். அவர் ரஷ்யாவிற்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ரஷ்யாவை எதிர்கொண்டு ஒரு மாதம் தொடர்ந்து போராடி வரும் நமது தைரியத்தை பாராட்டி மக்கள் அனைவரும் வீதிகளுக்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவியுங்கள் ஜெலன்ஸ்கி கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் உலகம் முழுவதும் மக்கள் தங்களின் ஆதரவை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர் காரணமாக உக்ரைனின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள நேட்டோ, ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடுகளில் நண்பர்கள் யார், நம்மை காட்டிக் கொடுத்தவர்கள் யார் என்று தெரிய வரும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர உலக மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் ஆயுதங்கள் வழங்கவில்லை என்றும் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு அவர் கூறியதாவது, ‘இந்த நாளில் இருந்து நீங்கள் உக்ரைனை ஆதரிக்கிறீர்கள் என்பதை காட்டுங்கள்.உங்கள் அலுவலகங்கள், உங்கள் வீடுகள், உங்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வாருங்கள்.அமைதியின் பெயரில் வாருங்கள்.

உக்ரைனை ஆதரிக்க, சுதந்திரத்தை ஆதரிக்க வாழ்க்கையை ஆதரிக்க உக்ரேனிய சின்னங்களுடன் வாருங்கள்.உங்கள் தெருக்களுக்கு வாருங்கள்.

சுதந்திரம் முக்கியம், அமைதி முக்கியம், உக்ரைன் முக்கியமானது. மார்ச் 24 முதல் உங்கள் நகரங்களில் போரை நிறுத்த விரும்பும் அனைவரும் ஒன்றாக திரளுங்கள்,’என்றார்.

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...