எரிபொருள் நிலையத்தில் வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது: வரிசையில் நின்று உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

(File Photo)
நிட்டம்புவ, ஹொரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாக்குவாத சண்டையில், முச்சக்கரவண்டி சாரதி ஒருவரால் 29 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு முன்னதாகவே எரிபொருளை பெற்றுக்கொண்ட சந்தேக நபர் பின்னர் எரிபொருளை பெற்றுக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் போது கூரிய பொருளால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற 37 வயதான முச்சக்கர வண்டி சாரதியை தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்றும் (21 ) ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

மீரிகமவில் உள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளை நிரப்பிவிட்டு தனது முச்சக்கர வண்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சனிக்கிழமை, கண்டி வத்தேகம- உடதலவின்னவில் 71 வயதான ஒருவர் அதிக உஷ்ணம் காரணமாக மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில், நேற்று கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தவர்களில் 70 வயதான ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...