மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட குழு நியமனம்

Date:

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவும் நாடாளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகம் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது. இதன் போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்தக் குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்த விசேட குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முனீர் முலாஃபர், சுனில் வடகல , அருண் ஹேமச்சந்திரா ,ரஞ்சித் மத்தும பண்டார,மனோ கணேசன்,லக்ஸ்மன் நிபுணஆராச்சி, சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் , சமன்மலி குணசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க ,சந்தன சூரியஆராச்சி , நிசாம் காரியப்பர் ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இணையவழி வெறுப்புப் பிரசாரம்: இலங்கையில் சமூக ஊடகங்கள் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான அலை!

"அறியாமையால் உருவாகும் தவறான புரிதல் பயத்தை வளர்க்கிறது, பயமே அமைதியின் மிகப்...

‘தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களுக்கு அனுமதி இல்லை’; நல்லூரில் திலீபன் சிலை அகற்றப்பட்டது குறித்து அமைச்சர் நளிந்த.

யாழ்ப்பாணம், நல்லூர் திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ...

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை அமுல்படுத்த கோரிக்கை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு...

பாடசாலைகளுக்கு அதிவேக Fiber இணையத்தள வசதி

நாடு முழுவதிலுமுள்ள 3700 பாடசாலைகளை கேந்திரமாகக் கொண்டு அதிவேக Fiber இணையத்தள...