சர்வதேச நாணய நிதியத்தை (IMF) கையாள்வதற்காக சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த குழுவில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆர்ட்டிகல ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன் கலந்துரையாடுவதற்காக ஏப்ரல் நடுப்பகுதியில் வொஷிங்டனுக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.