இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இன்றைய தினம் வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸை சந்தித்துள்ளார்.
அதேநேரம் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சவூதி வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டில் சடுதியாக எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் அவருடைய வருகைத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் பெற்றோல் மற்றும் எரிவாயு தொடர்பில் சவூதி இளவரசரோடு ஜனாதிபதி கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.