சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

Date:

சவுதி அரேபியாவில் நேற்றையதினம் ஒரே நாளில் அதிகபட்சமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வரலாற்றில் இடம்பிடித்தது.

அதற்கமைய சவூதி அரேபியாவைச் சேர்ந்த 73 பேரும் யெமன் நாட்டைச் சேர்ந்த, 7 பேரும் சிரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்களாக மொத்தம் 81 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறுகிறது.

அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா மற்றும் ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களின் உறுப்பினர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு 69 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு 81 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனைக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மரண தண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் போதிலும், பயங்கரவாதம் உள்ளிட்ட மோசமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை சரி என்றே மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்தச் சூழலில் சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு முழுவதும் அங்கு நிறைவேற்றப்பட்ட மொத்த மரண தண்டனைகளை விட அதிகமாகும்.

சவூதியின் முக்கியமான பொருளாதார மையங்கள் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டவர்கள். சிலர் சவூதி பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டவர்கள்.

சிலர் சட்ட விரோதமான ஆயுதங்களை நாட்டிற்குள் கடத்தினார்கள். இதுபோன்ற மோசமான குற்றங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்று சவூதி அரசு தெரிவிக்கின்றது.

சர்வதேச அளவில் அதிகம் மரண தண்டனை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக சவூதி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...