சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இலங்கைக்கான முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்!

Date:

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இன்றைய தினம் அதிகாலை 1.20 மணியளவில் இலங்கை வந்துள்ளார்.

சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சரின் இருதரப்பு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இளவரசர் பைசலை இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் அல் ஹார்த்தி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இராச்சியத்தின் ஊழியர்கள் பலர் வரவேற்றனர்.

இதனிடையே இலங்கையில் நிலவும் எரிபொருள், பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி கலந்துரையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அவருடன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் 18 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய் வளம் மிக்க தேசத்தின் வெளியுறவு அமைச்சர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு (14) பின்னர் நேபாளம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...