ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 2ஆம் இடம்!

Date:

ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டி நேற்றையதினம் கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, போட்டித் தொடரின் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் அஹமட் நிபால் பெற்றுக்கொண்டார்.

இலங்கை பாடசாலை மட்ட கால்பந்தாட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியை கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உட்பட கல்லூரியின் ஆசிரியர்களும் பாராட்டுவதில் பெருமிதம் கொள்கின்றது.

அதேநேரம், அஹமட் நிபால் தனதாக்கிக் கொண்ட இரண்டாவது சிறந்த கோல் காப்பாளருக்கான விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...