டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்: தொழில்நுட்ப அமைச்சு!

Date:

இந்தியாவின் நிதியுதவியுடன் நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத் துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அமைச்சின் செயலாளரான ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக இலங்கைக்கு 8 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் அண்மையில் வழங்கப்பட்டது.

பயோமெட்ரிக் தகவல் மூலம் குடிமக்களை அடையாளம் காண்பதை எளிதாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வருடம் நவம்பர் மாதம் முதல், பிரஜைகளுக்கான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...