டுபாயில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் மாநாட்டில் அமைச்சர் வீரசேகர பங்கேற்பு!

Date:

இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, டுபாய் நாட்டின் இளவரசர் ஷெய்க் ஹம்தான் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூமை  சந்தித்துள்ளார்.

நேற்றைய தினம் உலக பொலிஸ் உச்சி மாநாட்டிலே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வீரசேகர இன்டர்போல் தலைவர் அஹமட் நசார் அல் ரய்சி டுபாய் பொலிஸ் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா அல் மரி மற்றும் துபாயில் உலக பொலிஸ் உச்சி மாநாட்டில் கூடியிருந்த தலைவர்களை சந்தித்தார்.

இதன்போது, குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் பிற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை குறித்து காவல்துறைத் தலைவர்களின் வருடாந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றது.

இந்த உலக பொலிஸ் உச்சி மாநாடு என்பது காவல் துறையில் தரத்தை மேம்படுத்துவதற்கான முன்னணி உலகளாவிய தளமாகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதிப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான  ஜெனரல் ஹிஸ் ஹைனஸ் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் அழைப்பின் பேரில் வருடாந்த ஒன்று கூடலுக்கு அமைச்சர் வீரசேகர அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...