தண்ணீர் போத்தல்கள் மற்றும் முகக்கவசங்களின் விலை அதிகரித்தது!

Date:

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 1.5 லிட்டர் குடிநீர் போத்தல் 90 ரூபாவிலிருந்து 120 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம், முகக் கவசங்களின் விலையும் இன்று முதல் 30வீதமாக அதிகரிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் அனைத்து வகைகளிலும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.

இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று நடைபெறவுள்ள புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

என்னைப் பற்றின குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சாட்சியத்தை வெளியிட தடை!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை...

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு கணக்குகளில்!

2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர்...