நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சாட்சியத்தை வெளியிட தடை!

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரி விக்கிரம ஜயந்த குமார நேற்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு மணி நேரம் சாட்சியமளித்தார்.

நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை சாட்சியப் பதிவு இடம்பெற்றது.

வழக்கு விசாரணைக்குப் பின்னர், சாட்சியத்தில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய மிக முக்கியமான தகவல்கள் உள்ளதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த சாட்சியங்களை எந்த ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என்றும், அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்ற காலத்தில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்த 89 சிறைக் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொடர்பான அறிக்கைகளையும் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

Popular

More like this
Related

நிதி நெருக்கடி: காஸாவில் அரை மில்லியன் பாலஸ்தீனர்களுக்கான உணவு உதவிகளை நிறுத்தியது உலக உணவுத் திட்டம்

கடுமையான நிதிப் பற்றாக்குறை காரணமாக ஐநா சபையின் உலக உணவுத் திட்டம்...

அடுத்த மூன்று நாட்களுக்குள் 3.5 இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு!

அடுத்த மூன்று நாட்களுக்குள் 3 இலட்சத்து 50 ஆயிரம் லிட்ரோ எரிவாயு...

மீத்தோட்டுமுல்லையில் நாளை இலவச மருத்துவ முகாம்

510 மீத்தோட்டுமுல்ல மக்கள் பாதுகாப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச மருத்துவ...

‘கவந்திஸ்ஸ’  யானையின் இறப்பு குறித்து விசாரிக்க சிறப்புத் தெரிவுக் குழுவை அமைக்க எதிர்க்கட்சி கோரிக்கை

இலங்கையின் இயற்கை தேசிய பாரம்பரியமாக கருதப்படும் 'கவந்திஸ்ஸ' (Kawanthissa) என்ற யானையின்...