தேசிய பொருளாதார சபைக்கு உதவும் ஆலோசனைக் குழுவிற்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமனம்!

Date:

தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் மேலும் இரு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்படி அசோக பத்திரகே மற்றும் மொஹான் பண்டிதகே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு புதிய உறுப்பினர்களுடன் தேசிய பொருளாதார கவுன்சிலுக்கு உதவ நியமிக்கப்பட்ட குழுவில் 16 பேர் உள்ளனர்.

நேற்றையதினம், தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நேற்றையதினம், இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

குறித்த குழுவின் உறுப்பினர்களாக, 01. பேராசிரியர் எச்.டி கருணாரத்ன, 02.பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த, 03. கலாநிதி துஷ்னி வீரகோன், 04. தம்மிக்க பெரேரா, 05. கிரிஷான் பாலேந்திர, 06. அஷ்ரப் உமர், 07. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, 08. விஷ் கோவிந்தசாமி, 09. எஸ்.ரங்கநாதன், 10. ரஞ்சித் பேஜ் 11. சுரேஷ் டி மெல், 12. பிரபாத் சுபசிங்க, 13. துமிந்த ஹுலங்கமுவ, 14. சுஜீவ முதலிகே. தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...