நம்பிக்கையில்லா தீர்மானம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் பதவியில் நீடிப்பாரா?

Date:

எதிராக, நாட்டின் பொருளாதாரத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவறாக நிர்வகித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவரின் அரசாங்கத்தை நீக்க, பாகிஸ்தானிய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.

வியாழன் (31) அன்று சபையில் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டு ஏழு நாட்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

திங்களன்று கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தேசிய சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிந்தார்.

நம்பிக்கையில் இல்லா தீர்மானம் தொடர்பாக, கூட்டத்தொடரை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்து, எதிர்க்கட்சிகள் தேசிய சபையில் மனு அளித்த பின்னர் பாகிஸ்தான் அரசியலில் நிச்சயமற்ற நிலை உருவானது.

இம்ரான்கானின் சொந்த கட்சி உறுப்பினர்கள் சிலரே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிக்கக்கூடும் என்பதால் ஆட்சி நெருக்கடி ஏற்பட்டது. இம்ரான் கான் பதவி விலகுவார் என்றும் பேசப்பட்டது. ஆனால் இம்ரான் கான் பதவி விலகவில்லை. மாறாக, தனது பலத்தை காட்டும் வகையில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

எவ்வாறாயினும் இம்ரான் கானின் அரசாங்கத்தை அகற்ற 342 இடங்கள் கொண்ட சபையில் 172 வாக்குகள் தேவை என்று பாகிஸ்தானின் எதிர்க்கட்சி கூறுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானின் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...