‘பாராளுமன்றத்தில் பேசுவதற்கான உரிமை மறுக்கப்பட்டது’: உதய கம்மன்பில

Date:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினராக இருந்து பாராளுமன்றத்தில் பேசும் உரிமை மறுக்கப்பட்டது தவறானது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கட்சியின் நெறிமுறைகள் தற்போது சமரசம் செய்யப்பட்டு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்கின்றன எனவும் அசர் தெரிவித்தார்.

பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது உரையை ஆற்றுவதற்கு கால அவகாசம் கோரி எழுத்துமூலமான கோரிக்கையை திங்கட்கிழமை (07) முன்வைத்திருந்தார்.

எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்தார்.

‘இன்று பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சபையில் பேசும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் நான் எடுத்துரைத்த போது, அவர் இது தொடர்பில் ஆராய்வதாக என்னிடம் தெரிவித்தார்.

சிறிது நேரம் கழித்து, அவருடைய அலுவலகத்திலிருந்து ஒருவர் வந்து, இன்றைக்கு பேச்சுப் பட்டியலில் என்னையும் சேர்க்க முடியவில்லை என்று சொன்னார்.

கடந்த வாரம் வரை எரிசக்தி அமைச்சராக இருந்த எனக்கு இந்நாட்டு மக்கள் 1,36,331 பேர் எனக்கு வாக்களித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் பேசுவதற்கான எனது உரிமையை மறுப்பது என்பது எனது வாக்காளர்கள் தங்கள் இதயங்களையும் மனதையும் வெளிப்படுத்தும் உரிமையை மறுப்பதாகும்,’ என்று அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்றத்தில் பேசும் உரிமையை சபாநாயகர் பாதுகாப்பார் என மரியாதையுடன் எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

கம்மன்பில பேசும் உரிமையை மறுப்பது அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்கள் மீது கட்சி கொண்டுள்ள நெறிமுறைகள், கொள்கைகள் மற்றும் நன்றியின் பிரதிபலிப்பாகும் என கம்மன்பில தெரிவித்தார்.

Popular

More like this
Related

பொத்துவில் பாடசாலைக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர்...

கனமழையால் 35 இடங்களில் நிலச்சரிவு : 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’!

நாட்டில் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக இதுவரை சுமார் 35 சிறிய...

முஸ்லிம் காங்கிரஸின் புதிய தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஹபீப் றிபான் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஓட்டமாவடியைச்...

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவின் ‘அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்’ நூல் வெளியீடு செப்டம்பர் 23 இல்!

"அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்" (අම්බුළුවාව - පර ආධිපත්‍යය පැරදවූ...