மத்திய வங்கி ஆளுநர் கப்ராலின் கருத்துக்கு ஜனாதிபதி, ரணிலிடம் மன்னிப்பு கோரினார்

Date:

File Photo

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அரசாங்கத்தை குற்றம் சாட்டி தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சர்வகட்சி மாநாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் மன்னிப்பு கோரினார்.

சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசியதற்காக கப்ராலை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியதையடுத்து, ஜனாதிபதி மன்னிப்பு கோரினார்.

மாநாட்டில் தனது உரையில், கப்ரால் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை விளக்கியதுடன், தற்போதைய நெருக்கடிக்கு முன்னாள் அரசாங்கத்தின் மீது பழி சுமத்தியுள்ளார்.

இந்தக் கருத்துக்களுக்கு பதிலளித்த ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், கப்ராலை இவ்வாறு கூறியதற்காக கடுமையாக சாடினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க உங்களால் (ஜனாதிபதி கோட்டாபய) இந்த மாநாடு நடத்தப்பட்டது. பழைய நட்புறவின் காரணமாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்திய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க நான் ஆஜராகியிருந்தேன்.

‘அதன்படி, தற்போதைய நெருக்கடியைப் பற்றி விவாதிக்கவும், சவால்களை சமாளிக்க தீர்வுகளை முன்மொழியவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம். இருப்பினும், இது பழி வாங்கும் நேரம் அல்ல, ‘என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் பிரதமர், ‘முன்னாள் அரசாங்கத்தின் குறைபாடுகளே தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்’ என மத்திய வங்கி ஆளுநர் தனது உரையை ஆரம்பித்ததைக் கண்டு வருந்துவதாகவும் இந்தப் பிரச்சினையை இழுத்தடித்தால், விஜய மன்னன் காலத்தில் அது முடிந்துவிடும்’ என்று ரணில்
விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணிலின் கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய மன்னிப்பு கோரினார்.

‘உங்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும். மேலும் “மத்திய வங்கி ஆளுநரின் கருத்துக்கள் எம்பி விக்ரமசிங்கவை காயப்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய வங்கியின் ஆளுநர் பின்பற்ற வேண்டிய செயற்பாடுகளை மாத்திரமே சுட்டிக்காட்டியதாகவும், அதனால் தான் முன்னாள் அரசாங்கம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

எவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஏனைய கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைகளை சேகரிப்பதற்காக இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...