இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், இன்றையதினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு மேலும் மேலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக ராஜபக்சவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து ஜெய்சங்கர் பசில் ராஜபக்ஷவுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல் பீரிஸைச் சந்தித்தார்.
இந்திய அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடனையும், எரிபொருளை இறக்குமதி செய்ய 500 மில்லியன் டொலர் கடனையும் வழங்கியதைத் தொடர்ந்து ஜெய்சங்கரின் வருகை இதுவாகும்.
சீராக முன்னேறி வரும் இந்திய-இலங்கை பாதுகாப்பு உறவுகளும் ஜெய்சங்கரின் வருகை அதிக கவனம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இலங்கையின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ள வேளையில் இந்தியாவிற்கு கடன்களை வழங்குவதற்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.