சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.
நாட்டிலுள்ள தனியார் வங்கிகளின் இன்றைய நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி இன்று 298 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் அதன் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 74 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 66 சதம். விற்பனை பெறுமதி 330 ரூபாய் 75 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 50 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபாய் 51 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 45 சதம்.