இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று கட்டார் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, சர்வதேச கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அப்துல் அஸீஸ் அல் அன்சாரியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கத்தாரில் 300,000 வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இலங்கை உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கை இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்தி செய்வது மட்டுமின்றி, வெளிநாட்டு வருவாயையும் அதிகரிக்கும் என்றார்.
இதன்போது, அமைச்சர் ராஜபக்ஷவுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு, பிரியங்கர ஜயரத்ன மற்றும் விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோரும் சென்றிருந்தனர்.