உக்ரைன் மீது ரஷ்யா போர் நிலவி வருகின்ற நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு அனைத்து நாடுகளும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகிறது.
இதற்கிடையில், சீனாவிடம் ரஷ்யா இராணுவ உதவியை கேட்டு இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உலகளாவிய பொருளாதார தடையால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதித்துள்ளது.
சீனா தனது தரப்பு ஆதரவை ரஷ்யாவுக்கு தெரிவித்து வருகிறது. சீனாவிடம் ரஷ்யா இராணுவ உதவியை கேட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு உதவுவதை சீனா தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம். நாங்கள் முன்னோக்கி செல்ல அனுமதிக்க மாட்டோம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்கா – சீனா இடையேயான உயர்மட்ட அதிகாரிகள் குழு கூட்டம் இத்தாலி தலைநகர் ரோமில் இன்று நடக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் உள்ள நிலையில் அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தையே நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வரும் நிலையில், அது தொடர்பில் அந்த நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி உக்ரைன் மீது இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்ய படையினர் தாக்குதல்களைய நடத்தி வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றது.
அதற்கமைய உக்ரைன்- ரஷ்ய பிரதிநிதிகள் இடையிலான 4ஆவது கட்ட பேச்சுவார்த்தை காணொளி மூலம் இன்று நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
.