நாட்டில் தற்போது காணப்படும் எரிபொருளுக்கான வரிசைகள் வார இறுதியுடன் முடிவிற்கு வரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் துரிதமாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
தேவையற்ற இடையூறுகள் இன்றி தமக்குத் தேவையான எரிபொருளை மாத்திரம் பெற்றுக்கொள்ளுமாறும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மக்களிடம் வலியுறுத்தியுள்ளது. .
மேலும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேவையான எரிபொருளை உரிய நேரத்தில் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது
இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத் தாபனத்திடமிருந்து, கொள்கலன்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கொண்டு செல்லும் பௌசர்களுக்கு எரிபொருள் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை கனியவள தனியார் பௌசர்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.